உள்ளடக்கத்துக்குச் செல்

கருவுட்பருனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவுட்பருனி அல்லது கருப்பருனி என்பது உயிரணுவின் கருவுக்குள் இருக்கும் ஒரு பருமையான அமைப்பு. இந்தக் கருப்பருனியைச் சுற்றிச் சவ்வுப் படலம் ஏதும் இல்லை. கருப்பருனியைக் காட்டும் கருத்துப் படம். மஞ்சள் நிறத்தில் இருப்பது உயிரணுக் கரு. அதனுள் கருப்பருனி இருப்பதை செம்மஞ்சள் நிறத்தில் காணலாம்
மாதிரி விலங்கு உயிரணுவின் நுண் உறுப்புகள்:
(1) கருவின்கரு அல்லது புன்கரு
(2) உயிரணுக் கரு
(3) இரைபோசோம்
(4) சுரப்பு புடகம் (Vesicle)
(5) அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை
(6) கொல்கி உபகரணம்
(7) கலமென்சவ்வு
(8) அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை
(9) இழைமணி
(10) புன்வெற்றிடம் (Vacuole)
(11) குழியமுதலுரு (Cytosol)
(12) இலைசோசோம்
(13) புன்மையத்தி (Centriole)

கருவுட்பருனி அல்லது நியூக்கிளியோலசு (இலங்கை வழக்கு: புன்கரு, ஆங்கிலம்: nucleolus) என்பது உயிரணுவின் உள்ளே காணப்படும் உயிரணுக் கருவின் உள்ளே மூடும் சவ்வு உறை ஏதும் இல்லாத பருத்த ஒரு அமைப்பு. இதனுள் புரதங்களும், கருக்காடிகளும் உள்ளன. கருவுட்பருனியைச் சுருக்கமாக கருப்பருனி என்றும் அழைக்கலாம். ரைபோசோமிய ஆர்.என்.ஏ இந்த கருவுட்பருனியினுள் படியெடுக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது. அதே போல ரைபோசோமிய உட்கூறுகளும் இங்கு உருவாக்கப்படுகின்றன. கருவுட்பருனியை எதிர்மின்னி நுண்நோக்கிகள் வழி காண இயலும். கருப்பருனியின் இயக்கத்தை அறிய உடனொளிர்வு புரதக் குறியீடு (fluorescent protein tagging) பயன்படுத்தலாம். இந்த கருப்பருனி பிறழ்ந்து இயங்க நேரிட்டால் பல நோய்கள் உண்டாகலாம். இந்தக் கருவுட்பருனி உயிரணுக் கருவின் கிட்டத்தட்ட 25 % கனவளவை உள்ளடக்கியிருக்கின்றது.

கருப்பருனியில்தான் ரைபோசோமிய ஆர். என்.ஏ உருவாவதற்குத் தேவையான மரபணுக்கூறுகளைத் தாங்கியிருக்கும் நிறப்புரிகளின் பல்வேறு உட்கூறுகள் (பகுதிகள்) ஒன்று சேர்கின்றன. கருப்பருனியில், உயிரணுக்களின் புரத விளைவிப்பாலை எனக் கூறப்படும் ரைபோசோம் உருவாவதற்குத் தேவையான ரைபோசோமிய ஆர்.என்.ஏ-க்களும், புரதங்களும் உருவாகின்றன[1]. இதனை உயிரணுவின் கருவின் கரு எனலாம்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Alberts et.al., Essential Cell Biology, 3rd Ed. Garland Science, 2010, page 184
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cell nucleolus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  翻译: