உள்ளடக்கத்துக்குச் செல்

கொசு வலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொங்கு கொசு வலை.
சட்டகத்தில் தொங்கும் கொசு வலை.
கூடாரம் வகை கொசு வலை.
ஜன்னல் வைத்த கொசு வலை.

கொசு வலை என்பது தற்பாதுகாப்பு கருவிகள் வகையை சார்ந்தது. இது கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.[1] இதனால் அவை பரப்பும் நோய்களில் இருந்து மனிதர்களைக் காக்கிறது. உதாரணமாக மலேரியா, டெங்கு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், ஜிகா வைரஸ் மற்றும் வெஸ்ட் நைல் வைரஸ்[2] உள்ளிட்ட பல்வேறு வகையான நோய் காரணிகளுக்கு எதிரானதாக உள்ளது. தரமான கொசு வலை என்பது நன்கு காற்று புகக் கூடியதாகவும் வெளிச்சத்தை உட்புக விடக் கூடியதாகவும் அதே சமயம் கொசுக்கள் மற்றும் பூச்சிகளை தடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும் இதை பயன்படுத்தும் பாேது சிலசமயம் ஓட்டை விழ வாய்ப்பு ஏற்படும். அதனை சிறு வண்ண பசை படங்கள் மூலம் ஒட்டி சரிசெய்ய முடியும்.

வரலாறு

[தொகு]

கொசு வலையின் பயன்பாடு என்பது முக்கியமாக அனோபிலஸ் கேம்பிய்யே எனப்படும் மலேரியா ஒட்டுண்ணிகளை கடத்தும் கடத்திகளான கொசுக்களிடமிருந்து பாதுகாப்பதாகவே இருந்தது. முதன் முதலில் சீனாவில் கி.மு 2700 ல் மலேரியா நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளது. 1880 ஆம் ஆண்டு வரை மலேரியா நோய் கடத்தி எதுவென்று கண்டறியப்படவில்லை, சார்லஸ் லூயிஸ் அல்போன்ஸ் லாவர்ன்[3] என்பவரே மலேரியாவிற்கான நோய் கடத்தி கொசு என்று அடையாளம் காட்டினார். கொசு வலை நீண்ட வரலாறு கொண்டது. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொசுவலை என்ற வார்த்தை பயன்பாட்டில் இருந்த போதிலும், இடைக்காலத்திய இந்திய இலக்கியங்கள் இந்து சமய வழிபாட்டு சடங்கு முறைகளில் கொசு வலைகள் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. பழங்கால தெலுங்கு மொழி இசைக்கலைஞரும் கவிஞருமான அன்னமய்யா தன்னுடைய கவிதைகளில் கொசுவலை என்று பொருள்படும் வார்த்தையை (தோமெட்ரு) பயன்படுத்தியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Oxford English Dictionary (draft ed.). Oxford University Press. 2009.
  2. "All Mosquito Netting Info". Archived from the original on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-10-27.
  3. 28. ^Murray, John. "Mosquitoes, malaria and man: a history of the hostilities since 1880.." Cab Direct 1 (1978): 1-314. Print.
  翻译: