உள்ளடக்கத்துக்குச் செல்

டூசுன் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டூசுன் மொழி
Boros Dusun
Bunduliwan
Dusun Language
நாடு(கள்) மலேசியா  புரூணை
பிராந்தியம்சபா, சரவாக், லபுவான்
இனம்டூசுன் மக்கள், கடசான் மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (1,40,000 டூசுன் மொழி காட்டப்பட்டது: 1991)[1]
1,00,000 மற்ற பேச்சுவழக்கு இன மக்கள் (1981–2000)[1]
ஆஸ்திரோனீசிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ஐ.எசு.ஓ 639-3
மொழிக் குறிப்புcent2100[2]

டூசுன் மொழி, (மலாய்: Bahasa Dusun; ஆங்கிலம்: Central Dusun அல்லது Dusun Language அல்லது Bunduliwan; டூசுன் மொழி: Boros Dusun); என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள டூசுன் மக்களின் (Dusun People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும். அத்துடன், இந்த மொழியைச் சபா மாநிலத்தைச் சேர்ந்த கடசான் மக்களும் (Kadazan People) பயன்படுத்துகின்றனர்.[3]

இந்த பேச்சுவழக்கு, குரோக்கர் மலைத்தொடரின் (Crocker Range) புண்டு (Bundu) மற்றும் லிவான் (Liwan) பள்ளத்தாக்குகளில் உள்ள மக்களாலும் அதிகமாய்ப் பேசப்படுகின்றது. ரானாவ் (Ranau), தம்புனான் (Tambunan), கெனிங்காவ் (Keningau) மாவட்டங்கள்; புண்டு-லிவான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ளன.[4]

சபாவின் பூர்வீக மக்களில் முதன்மை வகிப்பவர்கள் கடசான் மக்கள், டூசுன் மக்கள் ஆகும். இவர்களுக்கு அடுத்த நிலையில் பஜாவு மக்கள், மூருட் மக்கள் உள்ளனர்.

டூசுன் மொழி வரிவடிவம்

[தொகு]

டூசுன் மொழி 22 இலத்தீன் (Latin Alphabet) எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது:

  • A B D G H I K L M N O P R S T U V W Y Z

டூசுன் மொழி எழுத்துக்கள் "பிமாடோ" (Pimato) என்று அழைக்கப் படுகின்றன.

சொல்லகராதி

[தொகு]
எண்கள்[5]
தமிழ் ஆங்கிலம் டுசுன்
ஒன்று one iso
இரண்டு two duo
மூன்று three tolu
நான்கு four apat
ஐந்து five limo
ஆறு six onom
ஏழு seven turu
எட்டு eight walu
ஒன்பது nine siam
பத்து ten hopod
நூறு hundred hatus
ஆயிரம் thousand soriong

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 639-3 டூசுன் மொழி
    Boros Dusun
    Bunduliwan
    Dusun Language
    at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Central Dusun". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. "Official Language & Dialects". Kadazandusun Cultural Association Sabah (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 June 2021.
  4. Lasimbang, Rita; Kinajil, Trixie (2004). "Building Terminology in the Kadazandusun Language" (in en). Current Issues in Language Planning 5 (2): 131–141. doi:10.1080/13683500408668253. 
  5. Price, Daniel Charles (2007). Bundu Dusun Sketch Grammar (in ஆங்கிலம் and Central Dusun). Crawley: University of Western Australia.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

குரோக்கர் தேசியப் பூங்கா

  翻译: