உள்ளடக்கத்துக்குச் செல்

நீலப்பச்சைப்பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலப்பச்சைப் பாசி (சயனோ பக்டீரியா)
புதைப்படிவ காலம்:3500–0Ma
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
சயனோ பக்டீரியா

Stanier, 1973
Orders

சயனோ பக்டீரியா வகைப்பாடு இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. பல இனங்கள் இன்னமும் விளக்கப்படவில்லை.[1][2]

  • தனிக்கல அங்கிகள்

Chroococcales (suborders-Chamaesiphonales and Pleurocapsales)

  • இழையுருவான அங்கிகள்

Nostocales (= Hormogonales or Oscillatoriales)

  • கிளை கொண்ட இழையுரு அங்கிகள்

Stigonematales

வேறு பெயர்கள்
  • Cyanophyta Steinecke, 1931
  • Cyanophyceae Sachs 1874
  • Myxophyceae Wallroth 1833
  • Phycochromaceae Rabenhorst 1865
  • Schizophyceae Cohn, 1879
படிமம்:IMG 6048.jpg
நுண்ணோக்கியால் எடுக்கப்பட்ட நீலப்பச்சைப்பாசி

நீலப்பச்சைப்பாசி அல்லது நீலப்பச்சைப்பக்டீரியா என அழைக்கப்படும் நுண்ணுயிரி சயனோபக்டீரியா (Cyanobacteria) என அழைக்கப்படுகிறது. சயனோ என்பது அதன் நிறத்தைக் குறிக்கும் கிரேக்கத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மருவிய சொல்லாகும். அதன் பொருள் நீலம் என்பதாகும். இவ்வகை நுண்ணுயிரிகள் நீர் நிலைகளில் மிகுதியாக காணப்படும் பாசிகளைப்போல் உள்ள பக்டீரியாக்களாகும். இது பாசிகளினுடைய பண்புகளைக் கொண்டிருந்தாலும் இவை பக்டீரியா என்னும் பெருந்தொகுதியில் இடம் பெற்றவையாகும். இது ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பால் தனக்குத் தேவையான வேதிகளை உற்பத்தி செய்து வாழ்கின்றன. ஒளிச்சேர்க்கையால் வாழும் ஆக்சிசனை(பிராணவாயு)வை வெளியிடா பிற பக்டீரியாக்களான ஊதா மற்றும் பச்சை கந்தக பக்டீரியாக்களிலிருந்து மாறுபட்டு, இவை உணவு உற்பத்தியின் போது பிராணவாயுவை வெளியிடும் பக்டீரியாக்களாகும்.

பெயர்க்காரணம்

[தொகு]
நீலப்பச்சைப்பாசிப் படர்ந்துள்ளதால் குளத்தில் உயிர்வளி தட்டுப்பாட்டில் மீன் இறந்து மிதக்கிறது.

இவ்வகைப்பாசிகள்/பக்டீரியாக்கள் நீர்நிலைகளில் மிகுதியாக காணப்படுகின்றன. இவை நன்னீர் மற்றும் உப்புநீர் நீலப்பச்சைப்பாசிகள் உள்ளன. இவை நீரில் வாழும் போது தனக்கான உணவை உற்பத்திச்செய்ய சில நிறமிகளின் உதவி தேவைப்படுகிறது. அதாவது பச்சைத்தாவரங்களில் உள்ள பச்சையம் (க்ளோரோபில்) என்னும் நிறமியைக்கொண்டு தனக்கான உணவை பரிதியின் ஓளியிலிருந்து உற்பத்தி செய்வதுபோல் இவைகளும் க்ளோரோபில் A (பச்சையம் வகை ஏ), பைக்கோசையனின் மற்றும் பைக்கோஎரித்திரின் போன்ற நிறமிகளைக்கொண்டுள்ளன. இவைகளின் நீல நிறத்திற்கு காரணமான பைக்கோசையனின் (நீலநிறமி)இதன் தனிச்சிறப்பாகும். ஆகையால் ஆங்கிலத்தில் சயனோபக்டீரியாக்கள் எனவும் தமிழில் பச்சையம் மற்றும் நீலநிறமியைக்கொண்டு இவை நீலப்பச்சைப்பாசி என விளிக்கப்படுகிறது. இவை பொதுவாக இவற்றின் நிறம் காரணமாக நீலப்பச்சைப் பாசி என அழைக்கப்பட்டாலும், இவைப் பாசிக் கூட்டம் (அல்கா) அல்ல. இவை ஒளித்தற்போசணிகளாக உள்ள பக்டீரியா வகைகளாகும்.

உருவப்பண்புகள் மற்றும் உடற்செயலியல்

[தொகு]

இவை ஒரு கல உயிரியாகவும் பல் கல உயிரியாகவும் வாழ்கின்றன. ஒரு கல உயிர்களில் குறிப்பிடத்தக்கவன சினிக்கோசிச்டிச், சினிக்கோகாக்கச், க்ரூவோகாக்கச் ஆகியன குறிப்பிடத்தக்கவை. பல் கல உயிரிகளில் குறிப்பிடத்தக்கவையாய் உள்ள அனபெனா, ஒசிலட்டோரியா, ஃபார்மிடியம் ஆகியன நூல் பட்டையைப் போன்றும் சில கூட்டு கல உயிரிகளாகவும் (உதாரணம் மைக்ரோசிச்டிச் ) உள்ளன. இவ்வின உயிர்கள் பூமியில் உள்ள நீர்நிலைகளில் பரவிக்கிடக்கின்றன. இதன் கலச்சுவர்த் தோற்றம் சில கிராம் நெகட்டிவ் பக்டீரியாக்களை ஒத்து உள்ளன. இதில் மற்ற பக்டீரியாக்களைப்போல பெப்டிடோக்ளைக்கன் என்னும் சர்க்கரையும் காணப்படுகின்றது. இது பேரினங்களான பாசி மற்றும் தாவரம் போன்றவற்றில் உள்ளதுபோல தனியமைப்புகள் (க்ளோரோப்ளாச்டு) என்னும் அமைப்பு அற்றது. இது பேருயிரிகளுக்கு ஒளிச்சேர்க்கை மற்றும் உணவு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன.இவைகளில் அது போன்ற தனியமைப்பு எதுவும் கிடையாது. இதில் பச்சையம் ஏ, தாவரபைலிப்புரதங்கள் (பைக்கோபிலிப்புரதங்கள்)ஆன பைக்கோசையனின் மற்றும் பைக்கோஎரித்திரின் ஆகிய சிறப்புவாய்ந்த நிறமிகளைக்கொண்டு தனக்கான உணவுகளைப் பெருக்கிக்கொள்கின்றன. இவைகளில் பைக்கோஎரித்திரின் என்பது சிவப்பு சார் நிறமியாகும். சார் (அக்சசரி)நிறமி என்பது மையநிறமியிலிருந்து மாறுபட்டவை.

இவை கரிமத்தை பரிதியின் ஒளியிலிருந்தும் புரத உருவாக்கத்திற்கு தேவையான நைதரசனை சில காற்றிலிருந்து தானாக நிலைப்படுத்தியும் அல்லது அடிப்படை நைதரசன் சேர்மமான நைட்ரேடிலிருந்தும் பெற்று அனுவெறிகையை நிரிமானித்துக்கொள்கின்றன. இவை சூரிய ஒளியிலிருந்து உணவு உற்பத்தியின் போது ஆக்சிசன் (பிராணவாயு) வெளியிடும் பெருங்குடும்பத்தைச்சார்ந்ததாக உள்ளது. இவை கரியமில வாயுவைப்பயன்படுத்தி சூரிய ஒளியிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. அதன் முடிவாக ஆக்சிசனையும் தண்ணீரையும் வெளியேற்றுகின்றன. இவையே ஒளிச்சேர்க்கையென அழைக்கப்படுகிறது. இவை புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

உடற்கூற்றியல்: சயனோபக்டீரியா நிலைக்கருவிலி (Prokaryota) கலக்கட்டமைப்பு உடைய அங்கிகளாகும். இவற்றில் கருவுறையால் சூழப்பட்ட உண்மையான கரு காணப்படுவதில்லை. இவற்றில் சில தனிக்கலங்களாக வாழ்பவையாகும். ஏனையவை இழையுருவான சமுதாயமாக ஒன்று சேர்ந்த தனிக்கலங்களாக வாழ்கின்றன. இவ்விழைகளின் கலங்கள் சளிய மடல்களால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும். இழையுருவான சயனோபக்டீரிய சமுதாயங்களில் மூன்று வகையான கலங்கள் காணப்படலாம்:

  • பதியக் கலங்கள்: அதிகளவில் காணப்படும் கல வகை. ஒளித்தொகுப்புக்கென சிறத்தலடைந்த கல வகை.
  • பல்லினச் சிறைப்பை (Heterocyst): நைதரசன் பதித்தலுக்கென சிறத்தலடைந்த கல வகை.
  • அசைவிலி (akinete): உணவுச்சேமிப்பு அதிகமுள்ள, தடித்த கலச்சுவருடைய தகாத காலத்தைக் கழிப்பதற்கென சிறத்தலடைந்த கல வகை.

பயன்கள்

[தொகு]

இவை விவசாயத்திலும், மனித மற்றும் உணவுகளிலும் இடம் பிடிக்கின்றன. விவசாயத்தில் இவை நைத்ரசன் உற்பத்தியில் ஈடுபடுவதால் இவை நில பண்படுதலில் சிறப்பு பெறுகின்றன. அனபெனா அசோல்லே என்பவை அசோல்லா எனப்படும் நீர்வாழ் குறுந்தாவரத்திடம் இயற்கையாக ஒன்றியவாழ்வு வாழ்கின்றன. அப்போது அது காற்றிலிருந்து நைத்ரசனை நிலைப்படுத்துகின்றன. இதனை நிலத்தில் இடும்போது நிலம் செப்பனிடப்படுகின்றன. அதேப்போல் நாச்டாக் மற்றும் ஏனைய அனெபெனா பேரினத்தை சார்ந்தவைகளும் இந்நைத்ரசனை நிலைப்படுத்துகின்றன.

ச்பைருலினா மற்றும் அர்த்ரோச்பைரா என்பன மனித உணவாகவும் விலங்கின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை 70% சதவிகிதத்திற்கும் மிகுதியாக புரதத்தைக் கொண்டுள்ளன. இவை சில மருத்துவ பண்புகளான சோகை நீக்குதல், நோய் எதிர்ப்பு வலிமை, மற்றும் வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இவை கடைகளில் மாத்திரை வடிவிலும் பொடியாகவும் கிடைக்கிறது.

இச்சயனோபக்டீரியாக்களானது, தனிப்பயன்களல்லாது காற்று மாசு குறைப்பு, கரியமில வாயு உட்கொண்டு புவிவெப்பமடைதல் கட்டுப்பாடு, பல மீன்களின் உணவு, உணவு சுழற்சியில் மிக முக்கிய அடித்தட்ட உற்பத்தியாளர், நச்சுலோகங்களை தன்மை மாற்றி பயனுள்ளதாக மாற்றல் போன்ற சிறப்பியல்புகள் பெற்றவை.

இவைகளில் சில நன்மை உண்டுச்செய்யும் காரணிகளாக மட்டுமல்லாது சில நச்சுமிக்க பாசிபடற்சியென்னும் (ப்லூம்) உருவாகி சூழல் சீர்கேட்டிலும் ஈடுபடுகின்றன. அவைகளுள் மைக்ரோசிச்டிச், ட்ரைக்கோடெச்மியம், ஆகியன குறிப்பிடத்தக்க சில.

மேற்கோள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cyanobacteria
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Cyanophyceae". Cyanophyceae. Access Science. பார்க்கப்பட்ட நாள் 21 April 2011.
  2. Ahoren Oren (2004). "A proposal for further integration of the cyanobacteria under the Bacteriological Code". Int. J. Syst. Evol. Microbiol. 54 (Pt 5): 1895–1902. doi:10.1099/ijs.0.03008-0. பப்மெட்:15388760. 
  翻译: