உள்ளடக்கத்துக்குச் செல்

பித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடம்பரத்தின் பிரமை கொண்ட நோயாளிகள் தாங்கள் உண்மையில் இருப்பதை விட மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று தவறாக நினைக்கலாம் (மெகலோமேனியா).

பித்து (Mania) என்பது மனோபாவத்தால் ஏற்படுகின்ற ஒருவகை நோய் வெளிப்பாடாகும். வழமைக்கு மாறான அதிக உற்சாகம், அதிகம் கதைத்தல, அமைதியின்மை, அதிக வேலைகளில் ஈடுபடுதல், தன்னைப்பற்றிய மிக உயர்வான எண்ணம் அல்லது கற்பனை போன்ற இயல்புகள் இவர்களிடம் காணப்படும். இது மனச்சோர்வு நோய்க்கு எதிரான இயல்புகளைக் கொண்டிருக்கும்.

இந்த பித்து நோய் ஏற்பட்ட ஒருவருக்கு மூன்று மாத காலமாவது நிலைத்து நிற்கும். இந்த நோய் ஏற்பட்ட ஒருவருக்கு பின்பு மனச்சோர்வு நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

இந்நோய்க்கான அறிகுறிகள்.

[தொகு]
  • அளவுக்கதிகமான தன்னம்பிக்கை.
  • மிகவும் கிளர்ச்சியடையாத மனநிலை.
  • அதிகம் கதைத்தல, அளவுக்கதிக உற்சாகம், அதிக வேலைகளில் ஈடுபடுதல், ஆடுதல், பாடுதல், போன்ற அமைதியற்ற அதிகரித்த நடவடிக்கைகள்.
  • நித்திரை குறைவாக இருத்தல்.
  • அதிகரித்த பாலியல் நாட்டம்.
  • சுய கட்டுப்பாடு குறைதல்.
  • ஊதாரித்தனமாக செலவழித்தல், எல்லோருக்கும் உடுபுடவைகள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி அன்பளிப்பு செய்தல்.
  翻译: