அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்
அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள் (Science and technology studies), அல்லது அறிவியல், தொழினுட்பம், சமூகப் பயில்வுகள் ( இரண்டின் சுருக்கம் STS) எப்படி சமூகமும் அரசியலும் பண்பாடும் அறிவியல் ஆராய்ச்சியையும் தொழில்நுட்பப் புத்தாக்கத்தையும் மாற்றுகின்றன என்பதையும் மேலும் பின்னவை இரண்டும் சமூகத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் எப்படி மாற்றுகின்றன என்பதையும் பற்றிய பயிலும் அறிவியல் புலமாகும்.
வரலாறு
[தொகு]பெரும்பாலான துறையிடைப் பயில்வுகள் போலவே அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள் நிகழ்ச்சி நிரலும் பல்வேறு புலங்கள், துணைப்புலங்களின் இணைவாலேயே ஏற்பட்டுள்ளதனால் , 1960 களில் அல்லது 1970 களில் அறிவியல் தொழில்நுட்பத்தைச் சமூக உட்பொதிவான கட்டமைப்பாகப் பார்க்கும் கண்ணோட்ட ஆர்வம் தோன்றியது.[1] 1960 களில் இருந்தே இப்புலத்தின் முதன்மைக் கருப்பொருள்கள் தனிதனியாகத் தோன்றலாயின. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று பிரிந்த நிலையிலேயே 1980 களில் நன்கு வளர்ந்தன. என்றாலும், உலூத்விக் பிளெக்கின் (1935ந்தனிவரைவுநூலாகிய Genesis and Development of a Scientific Fact இதன் கருப்பொருள்களைத் தான் முன்னமே எதிர்பார்த்தது. எல்டிங் ஈ. மோரிசன் 1970 களில் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இப்புலத்துக்கானதொரு திட்டநிரலை ஏற்படுத்தினார். இதுவே இப்புலத்தில் எதிர்கால கருத்தியலான படிம மாகியது. உலகளாவிய நிலையில் 2011 க்குள் 111 அறிவியல் தொழில்நுட்ப பயில்வுக்கான ஆராய்ச்சி மையங்கள் தோன்றிவிட்டன.[2]
முதன்மைக் கருப்பொருள்கள்
[தொகு]தொழில்நுட்ப வரலாறு. தொழில்நுட்ப வரலாறு தொழில்நுட்பத்தை அதன் சமூக், வரலாற்றுச் சூழலில் ஆய்கிறது. சில வரலாற்றாளர்கள் 1960 களின் தொடக்கத்தில் தொழில்நுட்பத் துணிபுவாத்தை கேள்விக்குள்ளாக்கனர். இவர்கள் இந்த வாதம் இயல்பான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் செயல்பாட்டை முடக்கிவிடும் என வாதிட்டனர். அதேவேளையில் சிலவரலாற்றளர்கள் மருத்துவ வரலாற்றுக்கான சூழல்சார்ந்த வரலாற்றை உருவாக்கத் தொடங்கினர்.
வரலாறும் அறிவியலின் மெய்யியலும் (1960 கள்). தாமசு குஃன் அறிவியல் புரட்சிகளின் கட்டமைப்பு (1962) என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் அறிவியல் கோட்பாடுகளின் மாற்றத்தை அறிதிறன் சட்டக மாற்றங்களோடு உறவுபடுத்தியது. இதற்குப் பிறகு பெர்க்கேலியில் உள்ல கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பிறவற்றிலும் அறிவியல் வரளாற்றாளர்களையும் மெய்யியலாளர்களையும் ஒருங்கிணைத்து ஒன்றிய பாட்த்திட்டம் உருவாக்கப்பட்டது.
அறிவியலும் தொழில்நுட்பமும் சமூகமும். அமெரிக்க, ஐரோப்பிய, பெரும்பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் 1960 களின் இடைப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் தோன்றிய மாணவர், புலவல்லுனர் இயக்கம் மகளிர் பயில்வுகள் போன்ற பல்வேறு துறையிடைப் புலங்களின் பாட்த் திட்டங்களை உருவாக்கிட உதவியது. இவை வழக்கமான பழைய பாடத்திட்டங்கள் புறக்கணித்த காலப் பொருத்தம் வாய்ந்த தலைப்புகளை அறிமுகப்படுத்தின. இவற்றில் ஒன்றே "அறிவியலும், தொழில்நுட்பமும், சமூகமும்" பாடத்திட்டமாகும்கீப்பாட்த்திட்டம் மானிடவியல், வரலாறு, அரசியல், சமூகவியல் எனப் பல்வேறு புலங்களை உள்ளடக்கியதால், இப்புலங்களைச் சார்ந்த அறிஞர்கள் இணைந்து ஒரு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தை அறிவியல் தொழில்நுட்பச் சிக்கல்களின் பயிவுக்காக வடிவமைத்தனர். பெண்ணிய அறிஞர்கள் பெண்களுக்கான தனிவழியில் அறிவியலில் மகளிர், பொறியியலில் மகளிர் எனத் தனிவகைப் பாடத்திட்டங்களை உருவாக்கினர்.
அறிவியல், பொறியியல், பொதுத்துறைக் கொள்கைப் பயில்வுகள். அறிவியல், பொறியியல், பொதுத்துறைக் கொள்கைப் பயில்வுகள். இப்புலம் அறிவியல், தொழினுட்பம், சமூக இயக்கத்துக்கு உந்துதல் அளித்த அதே நோக்கங்களுக்காக 1970 களில் எழுச்சி கண்டது: மக்களின் ஆகச் சிறந்த ஆர்வத்தால் அறிவியல் தொழினுட்பம் உருவாகிறது எனும் பொருளில் அத்துறை பல வளர்ச்சி இடர்களையும் சந்திக்க நேர்ந்துள்ளது. அறிவியல், தொழினுட்பம், சமூக இயக்கம் வருங்கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாளர்களை மாந்தப் பண்புடையவர்களக்க முயன்றது; ஆனால், இப்புலம் புதுவகை அணுகுமுறையை மேற்கொள்ளத் தொடங்கியது. இது மாணவரை அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை வகுக்கும் தொழில்முறை வல்லுனராக்கியது. சில பாட்த்திட்டங்கள் அளவியலான முறைகளில் கவனம் செலுத்தியது. இந்த அனைத்து முயற்சிகளும் அறுதியாக அமைப்புப் பொறியியலால் உள்வாங்கப்பட்டன. மற்றவர்கள் சமூகவியல், பண்பியலான அணுகுமுறைகளில் ஈடுபட்டனர். இவர்களரொருங்கிணைந்த அறிவியல், தொழினுட்பம், சமுகவியற் புலங்களில் அறிஞராகினர்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bijker, W. E., Hughes, T. P., Pinch, T. and Douglas, D. G., The Social Construction of Technological Systems: New Directions in the Sociology and History of Technology, MIT Press, Cambridge, 2012.
- ↑ The STS Wiki.
மேலும் படிக்க
[தொகு]- Bauchspies, Wenda; Croissant, Jennifer; Restivo, Sal (2005). Science, Technology, and Socity: A Sociological Approach. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780631232100.
- Bijker, Wiebe; Hughes, Thomas; Pinch, Trevor, eds. (1987). The Social Construction of Technological Systems: New Directions in the Sociology and History of Technology. Cambridge, MA: MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0262022620.
- Felt, Ulrike; Fouché, Rayvon; Miller, Clark A.; Smith-Doerr, Laruel, eds. (2017). The Handbook of Science and Technology Studies (4th ed.). Cambridge, MA: MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262035682.
- Fuller, Steve (1993). Philosophy, Rhetoric, and the End of Knowledge: The Coming of Science and Technology Studies. Madison, WI: University of Wisconsin Press. (2nd edition, with James H. Collier, Lawrence Erlbaum Associates, 2004)
- Hess, David J. (1997). Science Studies: An Advanced Introduction. New York: NYU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780814735640.
- Jasanoff, Sheila; Markle, Gerald; Petersen, James; Pinch, Trevor, eds. (1994). Handbook of Science and Technology Studies. Thousand Oaks, CA: Sage. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0803940215.
- Kuhn, Thomas (1962). The structure of scientific revolutions. Chicago: University of Chicago Press.
- Latour, Bruno (1987). Science in action: How to follow scientists and engineers through society. Cambridge, Massachusetts: Harvard University Press.
- Restivo, Sal, ed. (2005). Science, Technology, and Society: An Encyclopedia. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195141931.
வெளி இணைப்புகள்
[தொகு]- STSWiki பரணிடப்பட்டது 2009-03-25 at the வந்தவழி இயந்திரம் (devoted to building resources, such as a worldwide list of STS programs and scholars)
- STS-Wiki of (Dutch) STS PhD research school பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம் (this page is partly a private wiki)
- Argentinean Network for Science and Technology Studies
- Instituto de Estudios sobre la Ciencia y la Tecnología - Universidad Nacional de Quilmes
இதழ்கள்
[தொகு]- Social Studies of Science
- Science, Technology, & Human Values
- Science & Technology Studies
- Technology in Society
- Research Policy
- Revue d'Anthropologie des Connaissances
- Minerva: A Journal of Science, Learning and Policy
- Science Technology and Society
- Science as Culture
- Technology and Culture
- Science and Public Policy
- Engineering studies
- Tecnoscienza. Italian Journal of Science & Technology Studies
- IEEE Technology and Society Magazine
- Nordic Journal of Science and Technology Studies
- Paakat: Revista de Tecnología y Sociedad
- Intersect: the Journal of Science, Technology, and Society, Stanford University
- DEMESCI: International Journal of Deliberative Mechanisms in Science