உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேசு ஹாப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேசு முர்ரே ஹாப்பர்
சனவரி 1984இல் ஹாப்பர்
பட்டப்பெயர்(கள்)"வியத்தகு கிரேசு"
பிறப்பு(1906-12-09)திசம்பர் 9, 1906
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்புசனவரி 1, 1992(1992-01-01) (அகவை 85)
ஆர்லிங்டன், வர்ஜீனியா, ஐ.அ.
புதைக்கப்பட்ட இடம்
ஆர்லிங்டன் தேசியக் கல்லறைத் தோட்டம்
சார்பு அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை/கிளை அமெரிக்கக் கடற்படை
சேவைக்காலம்1943–1966, 1967–1971, 1972–1986
தரம் ரியர் அட்மிரல்
விருதுகள் பாதுகாப்பு சீர்மிகு சேவை பதக்கம்
லெஜியன் ஆஃப் மெரிட்
சிறப்புச் சேவை பதக்கம்
அமெரிக்க கேம்பெய்ன் பதக்கம்
இரண்டாம் உலகப்போர் வெற்றிப் பதக்கம்
தேசிய பாதுகாப்பு சேவை பதக்கம்
ஆயுதப்படைகளின் இருப்புப் பதக்கம் - இரு மணிப்பேழை கருவிகளுடன்
கடற்படை இருப்பு பதக்கம்

கிரேஸ் முர்ரே ஹாப்பர் (Grace Murray Hopper, திசம்பர் 9, 1906 – சனவரி 1, 1992) அமெரிக்க கணினியியலாளரும் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரலாகப் பணியாற்றியவருமாவார். கணினியிலில் ஓர் முன்னோடியாக ஆர்வர்டு மார்க் I கணினியில் பணியாற்றிய முதல் நிரலாளர்களில் ஒருவரும், கணினிகளுக்கு முதன்முதலாக நிரல்மொழிமாற்றி எழுதியவரும் ஆவார்.[1][2][3][4][5] கணிப்பொறியை அடிப்படையாகக் கொள்ளாத நிரலாக்கமொழி குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கியவர் இவரே. இவரது கருத்தாக்கத்தின் வழியிலேயே உயர்நிலை கணினி நிரலாக்க மொழிகளில் முதலாவதான கோபால் (நிரலாக்க மொழி) உருவாக்கப்பட்டது.

கணினியிலிருந்து ஓர் அந்துப்பூச்சி எடுக்கப்படுவதைக் கண்ட கிரேஸ் அதனையொட்டி கணினி நிரல்களில் வழு நீக்கப்படுவதற்கு இன்று பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சி நீக்கம் எனப் பொருள்படும் டிபக்கிங் என்ற சொல்லை உருவாக்கினார். அவரது சாதனைகளையும் கடற்படை பதவியையும் கருதி சிலநேரங்களில் "வியத்தகு கிரேசு" (Amazing Grace) எனக் குறிப்பிடப்படுகிறார்.[6][7] அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று (USS Hopper (DDG-70)) இவரது பெயரைத் தாங்கி உள்ளது; இதேபோல தேசிய ஆற்றல் ஆய்வு அறிவியல் கணினி மையத்தின் மீத்திறன் கணினி கிரே XE6க்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Richard L. Wexelblat, ed. (1981). History of Programming Languages. New York: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-745040-8. {{cite book}}: |author= has generic name (help)
  2. Donald D. Spencer (1985). Computers and Information Processing. C.E. Merrill Publishing Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-675-20290-9.
  3. Phillip A. Laplante (2001). Dictionary of computer science, engineering, and technology. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-2691-2.
  4. Bryan H. Bunch, Alexander Hellemans (1993). The Timetables of Technology: A Chronology of the Most Important People and Events in the History of Technology. Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-671-76918-5.
  5. Bernhelm Booss-Bavnbek, Jens Høyrup (2003). Mathematics and War. Birkhäuser Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7643-1634-1.
  6. "Cyber Heroes of the past: "Amazing Grace" Hopper". பார்க்கப்பட்ட நாள் December 12, 2012.
  7. "Grace Murray Hopper". பார்க்கப்பட்ட நாள் December 12, 2012.
  翻译: